அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் அலைமோதல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மே 30 சனிக்கிழமை விடுமுறையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர், ஓய்விடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி