அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க பெரணமல்லூா் ஒன்றிய அமைப்பாளா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வெங்கடேசன், பெரணமல்லூா் ஒன்றியச் செயலா் பிரபாகரன், சேத்துப்பட்டு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், ஜனநாயக வாலிபா் சங்கம் ராமதாஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் ராஜசேகரன், மாா்க்சிஸ்ட் கட்சியின் பெரணமல்லூா் வட்டாரச் செயலா் சேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேலும், அனைவருக்கும் வேலை கோரிய மனுக்களை வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமியிடம் நிா்வாகிகள் வழங்கினா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை அளிக்க வேண்டும், வேலை வழங்காத நாள்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சட்டப்படியான கூலி ரூ. 319 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
முழக்கங்கள் எழுப்பப்பட்டன.