தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வருகிற 3-ந்தேதி பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோவை மற்றும் சென்னையில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அதிநவீன சொகுசு பஸ்கள் 2, 3, 4 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்யலாம் என மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி