இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடியின் அடிப்படை வசதிகள், 2 கிமீ. தொலைவுக்கு அப்பால் உள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடி மையத்தை மாற்றி அமைத்தல், கூடுதல் வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும். அவ்வாறான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை அமைத்து வீடியோ பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், கூட்டத்தில் திமுக சார்பில் தொகுதி பொறுப்பாளர் எஸ். எஸ். அன்பழகன், நகரமன்றத் தலைவர் ஏ. சி. மணி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியச் செயலர் மாமது, நகரமன்ற உறுப்பினர் மாலிக்பாஷா, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.