இதில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தற்காலிக பஸ் நிலையங்களில் நிழற்பந்தல், குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்ய வேண்டும். மேலும், காவல் உதவி மையங்கள், காவல் கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகள், கார், வேன்களை நிறுத்த பார்க்கிங் வசதி என விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, கோயில் நிர்வாகமும், காவலத்துறையும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.