சென்னை: நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை டி. ஜி. பி. அலுவலகத்திற்கு நடிகர் அருண் விஜய் வீடு மற்றும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளி எனத் தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி