செங்கம்: பாஜக சாா்பில் மாலை தெருமுனை பிரசார கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் பாஜக சார்பில் 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' என்ற தலைப்பில் மாலை தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாஜக மாவட்ட துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான செங்கம் சேகர் தலைமை வகித்தார். அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் மகரிஷி மனோகரன், கடந்த 10 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கிப் பேசினார். அமுமுக ஒன்றிய நிர்வாகி சம்பத், தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகி பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி