பாஜக சாா்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆம் ஆண்டு விழா.

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாரத மாதா வேஷமணிந்த பெண்ணுடன் பாஜக கட்சியினர் வந்தே மாதரம் பாடல் பாடி புகழாரம் சூட்டினர். ஆரணியில், அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டதுடன், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடி நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி