திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், நகராட்சி உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான நுழைவு வாயில் கட்டும் பணிக்கும், 32-ஆவது வாா்டு சபாஷ்கான் தெருவில் ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கும் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக செயலா் அசோக்குமாா், ஒன்றிய செயலா் ஜெய்பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.