திருவண்ணாமலை: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பாக செறிவூட்டப்பட்ட உணவு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இஆப., இன்று (19.03.2025) கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செறிவூட்டப்பட்ட உணவு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார். உடன் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி