இதனால், அங்கிருந்த பொதுமக்கள் இவருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். பின்னர், மணிகண்டன் மதுபோதையில் மீண்டும் குலாப்நபி அவரது மனைவியிடம் சென்று தகராறு செய்து அசிங்கமாக பேசி திட்டினாராம். அப்போது, குலாப்நபி, மணிகண்டனை தட்டி கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரது உறவினர்கள் ஜெரினா, பவித்ரா, புவனேஷ்வரி, தேவி ஆகிய 5 பேரும் சேர்ந்து குலாப்நபி, அவரது மனைவி மைதிலியை கீழே தள்ளி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றார்களாம்.
இதில், படுகாயமடைந்து ரத்தக்காயத்துடன் இருந்த குலாப்நபி, அவரது மனைவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, ஆரணி டவுன் போலீசில் குலாப்நபியின் மனைவி மைதிலி (38), நேற்று முன்தினம் (ஜூலை 30) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவாகி உள்ள மணிகண்டன் உட்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.