வட்டாட்சியர் அகத்தீஸ்வரர், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பாலாஜி, வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றியச் செயலர் மனோகரன் வரவேற்றார்.
இதையடுத்து நடைபெற்ற முகாமில் வருவாய்த்துறை, வேளாண்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்வாரியத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து வந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் சார்பில் 929 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் உடனடியாக தீர்வு காணப்பட்ட சுமார் 6 மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சேத்துப்பட்டு வட்டாட்சியர் வழங்கினார். முகாமில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.