ஆரணி நகா்மன்றக் கூட்டம்: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நகரமன்றக் கூட்டத்தில், புதிய பேருந்து நிலையம் சீரமைக்க பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி, பேருந்து நிலைய கட்டடங்களை இடிக்கும் பணி, அண்ணா சிலை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி