ஆரணி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வகம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 54.75 லட்சத்தில் பொது சுகாதார ஆய்வகம் திறக்கப்பட்டது. 

தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ், கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார ஆய்வக அறையை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதே வேளையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆர். சிவானந்தம் குத்துவிளக்கேற்றி வைத்தார். 

நிகழ்ச்சியில் மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், திமுக தொகுதி பொறுப்பாளர் எஸ். எஸ். அன்பழகன், நகரமன்றத் தலைவர் ஏ.சி. மணி, திமுக ஒன்றியச் செயலர்கள் துரைமாமது, எஸ். மோகன், அரசு மருத்துவர் சுரேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், தசரதராமன், ஊராட்சித் தலைவர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி