ஆரணி: கணவனுக்கு அல்வா..காதலனுடன் ஓடிய புதுப்பெண்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (28). இவருக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கடந்த 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மறுநாள் ஜூன் 9 அன்று மாமியார் வீட்டு விருந்துக்காக மனைவியை அழைத்துச்சென்றார் சதீஷ். அங்கிருந்து காணாமல் போன அந்த இளம்பெண் தன்னுடைய காதலனுடன் ஓடிவிட்டார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் வேலூர் போலீசார் அந்தப்பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி