ஆரணி அடுத்த பையூரைச் சேர்ந்த வினோத்குமார் (40), இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி கவிதா (39) கைப்பேசியில் வேறு ஒருவருடன் பேசுவதாக சந்தேகப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு அவரைத் தாக்கியுள்ளார். மயங்கி விழுந்த கவிதாவை ஆரணி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்ததாகக் கூறி சிகிச்சைக்குச் சேர்த்தார். பின்னர் தலைமறைவானார். மருத்துவமனையில் கவிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. புகாரின் பேரில், ஆரணி போலீஸார் வினோத்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.