ஆதனூா் கிராமத்தில் தவெக சாா்பில் திண்ணை பிரசார கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தவெக சாா்பில் திண்ணை பிரசார கூட்டத்தில், ஏழைகளுக்கு இலவச சேலைகளும், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலா் சத்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்சியின் கொள்கைகள் மற்றும் திமுக ஆட்சி குறித்துப் பேசினாா். ஒன்றியச் செயலா் தயாளன் தலைமை வகித்த இந்த நிகழ்வில், பல கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி