திருவண்ணாமலையில் பியூட்டி பார்லரில் பணிபுரியும் 23 வயது இளம்பெண், கடந்த 31-ம் தேதி இரவு கிரிவலம் சென்றபோது உடல்நலக்குறைவு காரணமாக நண்பரின் உதவியுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் இருவரையும் தாக்கி, இளம்பெண்ணிடம் இருந்த தங்க கம்மலை பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.