வந்தவாசியில் பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு பேர் பணம் வைத்து சூதாடியதைக் கண்டனர். இதையடுத்து, காஞ்சிபுரம் சாலையைச் சேர்ந்த கிதர்முகமது (65), பாலுடையார் தெருவைச் சேர்ந்த பார்கான் (29) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி