திருப்பூர் மாவட்டம் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் சம்பவத்தன்று தெருவில் நடந்து சென்ற போது அங்கு வந்த சண்முகம் நகரைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் குடிபோதையில் பணம் கேட்டுள்ளார். அதற்கு பேச்சியம்மாள் இல்லை என்று கூறியதால் பாலகுமார் மூதாட்டியை தாக்கியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் மூதாட்டியை தாக்கிய பாலகுமார் கைது செய்யப்பட்டு உடுமலை நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.