போராட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், நகர்புற வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு 4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 3796 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியது. உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ், டி.ஏ.டி.யு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், உடுமலை ஒன்றிய தலைவர் ராஜகோபால், உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ் தென்றல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி