உடுமலையில் பயணிகள் நிழற்கூரை அமைக்கும் பணி இழுபறி

திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக சில மாதங்களுக்கு முன்பு நிழற்கூரை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் வெயிலிலும் மழையிலும் பயணிகள் நிற்க வேண்டியுள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி