உடுமலை திருமூர்த்தி அணை பூங்கா திறக்கப்படுமா?

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால், இங்குள்ள சிறுவர் பூங்கா பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளது. இதனால், வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி