உடுமலையில் பயணிகள் நிழற்கூரை பராமரிக்கப்படுமா

திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ரோட்டில் உள்ள எஸ். வி. புரம் பகுதியில் நாள்தோறும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வரும் பயணிகள் நிழற்கூரை, போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்துள்ளது. கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு உள்ள இந்த நிழற்கூரை, இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நிழற்கூரையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி