திருப்பூர் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி, நான்கு தனியார் பள்ளிகள், பிஎஸ்என்எல் அலுவலகம், குடியிருப்பு மற்றும் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியில் தினமும் வந்து செல்கின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால், சாலையை உடனடியாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.