திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரங்களில் கிணற்று பாசனத்தில் ஆண்டு முழுவதும் சராசரியாக 20000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன இந்த நிலையில் விலை வீழ்ச்சி காலங்களில் சாலையோரம் தக்காளியை கொட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜாம் தொழிற்சாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டங்களுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தற்பொழுது வரை அமைக்கப்படவில்லை எனவே ஜாம் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்