திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு கொப்பரை உற்பத்திக்கான உலர் களங்கள் அதிகமாக இருந்தாலும், விற்பனை செய்ய உடுமலை பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பெதப்பம்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடத்த வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.