உடுமலை அருகே காட்டு யானை நடமாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணார் சாலையில் எஸ் பெண் என்ற இடத்தில் ஒற்றை யானை இன்று (மார்ச் 26) உலா வந்ததால் குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பே டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை சென்றது. பின்னர் சாலையில் வாகன போக்குவரத்து நடைபெற்றது. காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் கவனமாக செல்ல வேண்டும். வாகனங்களை விட்டு இறங்க கூடாது. தொலைபேசியில் புகைப்படம் எடுக்க கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி