உடுமலை - மூணாறு சாலையில் வாகனத்தை மறித்த காட்டு யானை

திருப்பூர் மாவட்டம் உடுமலை-மூணாறு சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், சின்னாறு பகுதியில் விரிகொம்பன் என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று சாலையில் வந்த லாரியை விட்டு, வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்தது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலாப் பயணிகளும் பீதியடைந்தனர். சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் யானை தானாக காட்டுக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி