உடுமலை பத்ரகாளியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட சங்கிலி வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா கடந்த 4-ம் தேதி துவங்கியது. தொடர்ச்சியாக கருப்பண்ணசாமிக்கு பூஜையும், திருமூர்த்தி மலைக்கு தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று பத்ரகாளியம்மன் சூலதேவருக்கு பால், சந்தனம், திருமஞ்சனம், அரிசி மாவு, மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி