திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் ஆண்டு பாசனத்திற்கு திருமூர்த்தி அணைகளில் இருந்து ஜனவரி 29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஐந்து சுற்றுகளாக 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சர்க்கரை மின் நிலையத்தில் பழுது, நீர் இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் வழங்க முடியவில்லை. எனவே, பாசன காலத்தை வரும் ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.