உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 6 பழைய ராஜ வாய்க்கால் பகுதிகளுக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை 105 நாட்களில் 40 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படும். இதன் மூலம் 4686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி