அமராவதி அணையிலிருந்து புதிய பாசனத்திற்கு தண்ணீர் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்த காரணத்தால் நீர் வரத்து அதிகரித்து நீர் இருப்பு திருப்தியாக உள்ள நிலையில் நேற்று பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் ஆற்று வழியாக திறக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் உள்ள 25,250 ஏக்கர் நிலங்களுக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தற்சமயம் அமராவதி அணை மொத்த நீர்மட்டம் 90 அடியில் 82.75 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி