உடுமலையில் பாசனகுளத்தில் கழிவு நீர் கலப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஏழு குளம் பாசன திட்டத்தின் கீழ் உள்ள பெரியகுளம், ஒட்டுக்குளம், செங்குளம் உட்பட பல்வேறு குளங்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்பொழுது பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவுகள் நேரடியாக குளங்களில் கலந்து வருகின்றது. இதனால் பாசனம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமான குளங்கள் முற்றிலுமாக மாசுபடும் நிலை உள்ளதால், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து நேரடியாக ஆய்வு செய்த பிறகு, கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி