திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் மாநில மையம் முடிவின்படி, காலம் முறை ஊதியம் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் காந்திராஜ், வட்டத் தலைவர் சந்திரமோகன் உட்பட பல கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.