திருப்பூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் நெடுஞ்சாலையால் ஒன்றிணைந்து பிரிந்து செல்லும் மையமாக விளங்குகின்றது. பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், தாராபுரம், பழனி, திண்டுக்கல் என பல்வேறு பகுதிகளுக்கு பழைய பஸ் நிலையத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறும் நிலையில் வாகனங்கள் தற்போழுது தாறுமாறாக சென்று வருகின்றன. எனவே, விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், இந்த பகுதிகளில் டிவைடர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.