உடுமலையில் இறைச்சிக் கழிவுகள் அகற்ற வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பொள்ளாச்சி ரோடு பகுதியில் கடந்த சில தினங்களாக இறைச்சிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்றும், கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி