திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக கோவை, மதுரை, திருவனந்தபுரம், திருச்செந்தூர், பாலக்காடு, சென்னை, மேட்டுப்பாளையம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், தென் மாவட்ட நகரங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று வருவதால், போதுமான ரயில்கள் இல்லை. விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பொதுமக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. ஆகையால், உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என உடுமலை ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் தென்னக ரயில்வேவுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.