திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட வாசவி நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் செல்லும் வழியான யூ.எஸ்.எஸ் காலனியில் ஒரு மாதத்திற்கு முன் குடிநீர் குழாய் பதிக்கும் பணி துவங்கியது. பணி முடிந்தும் இங்கு தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. இதன் வழியாக ஏராளமான வாகனங்கள் வரும் வழியில் இரவு மற்றும் பகல் நேரத்தில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் விரைவாக குழியை மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.