ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு சேதம் அடைந்த பயிர்களை வனத்துறை கணக்கெடுத்து காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த முடியாமல் நிலைமையில் மறுபடியும் சேதமடைந்த நிலையைக் கண்டு மனம் அடைந்த காளிமுத்து விவசாயி என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி கண்ணீர் வடித்து சோகமடைந்துள்ளது. உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து இதே சூழல் அனைத்துப் பகுதியிலும் கோவை, திருப்பூர் என பல மாவட்டங்களில் நடப்பதால் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து விவசாய சங்கங்களையும் இணைத்து அனைத்து விவசாயிகளின் திரட்டி, தீர்வு கிடைக்கும் வரை திருப்பூர் மாவட்ட வன அலுவலகத்தில் முன்பு போராட முடிவு செய்துள்ளதாக உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.