உடுமலை: மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிழவன் காட்டூர் ஊராட்சியில் மக்காச்சோளம் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இப்பகுதியில் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த மக்காச்சோளப் பகுதிகளை நாசம் செய்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி