திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டத் தலைவர் கிரி தலைமையில், செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். முடிவில் பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.