இந்த நிலையில் நேற்று (ஜனவரி 23) மாலை இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்தனர். தற்போது சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் இந்தப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் பகல், இரவு நேரங்களில் உள்ளதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதியில் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.