உடுமலை: வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டல மாநாடு- பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று மடத்துக்குளம் லயன் சங்க வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டல மாநாடு, லயன்ஸ் மண்டல தலைவர் மடத்துக்குளம் லயன் வி. ராமதுரை அவர்களுக்கு பாராட்டு நடைபெற்றது. விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழிசை தங்கபாண்டியன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர். விழாவில் கீரனூர் சமரச சன்மார்க்க சங்க செயலாளர் ஆசிரியர் குப்புசாமி அவரது சேவையினை பாராட்டி தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழிசை தங்கபாண்டியன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்நாள் சேவையாளர் விருது வழங்கி கௌரவம் செய்தனர். மேலும் மடத்துக்குளம் லயன் சங்க செயலாளர் ராமதுரை அவர்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சிறப்பு விருந்தினர்கள் இவரின் சேவைகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நிகழ்வில் மடத்துக்குளம் கமிட்டி நிர்வாகிகள், லயன் கே. பி முருகேசன், லயன் கே சக்தி, லயன் சிவராஜ், லயன் முத்துசாமி, மாவட்ட ஆளுநர் நித்யானந்தம், மற்றும் அரிமா. லோகநாதன் ஆர் கே ஆர் கல்வி குழுமங்களின் தலைவர் ஆர் கே ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி