உடுமலை: சிவராத்திரியை முன்னிட்டு திருச்சபார ஊர்வலம்!

திருப்பூர், உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் இன்று மாலை சிவராத்திரி விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பூலாங் கிணறு பகுதியில் இருந்து பாரம்பரிய முறையில் திருசப்பாரம் திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில், வாளவாடியில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். வேண்டுதல் நிறைவேற பொதுமக்கள் திருசப்பாரத்தின் மீது பழம், உப்பு வீசி வழிபட்டனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி