ஏ அரங்கத்தை உடுமலை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அருண் கார்த்திக், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் தொடங்கி வைத்தனர். பி அரங்கத்தை அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்க மாநில பொருளாளர் பரமேஸ்வரன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இரவு 7 மணி அளவில் விஜய் டிவி புகழ் நீயா? நானா? கோபிநாத் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கட்டுமான பொருட்களை பார்வையிட்டதுடன் கலை நிகழ்ச்சியையும் பார்த்து ரசித்தனர். அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்க தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் கணேசன், செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் அருண்குமார், அஸ்திவாரம் ஒருங்கிணைப்பாளர் குமரவேல், சத்யம் பாபு உடுமலை தமிழிசை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.