உடுமலை: காட்சிப் பொருளாக புற காவல் நிலையம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காகவும், குற்ற சம்பவங்களைத் தடுக்கவும் சில ஆண்டுகளுக்கு முன் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது போதிய காவலர்கள் நியமிக்கப்படாததால், காவல் நிலையம் பெயரளவிலேயே செயல்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி