பின்னர் சம்பவ இடத்திற்கு உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயை அணைக்க கடும் போராடினர். மேலும் தீயின் வேகம் அதிகரித்த காரணத்தால் மடத்துக்குளம் பகுதியில் இருந்து தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் 10 மேற்பட்ட குடிநீர் லாரிகள் மூலம் சுமார் 7 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் தீ விபத்தில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 300 டன் அளவுள்ள தென்னை நார் கட்டிகள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தீயணைப்புத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்