திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.