உடுமலை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க.. ஆண்டு விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 33வது ஆண்டு விழா தலைவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் புல்லாங்குழல் மற்றும் மிருதங்கம் இசை நிகழ்ச்சியை மகதி கண்ணப்பன், வசீகரன் கண்ணப்பன் ஆகியோர் மேற்கொண்டனர். பின்னர் மூத்த ஓய்வூதியர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுக்கள் செய்யப்பட்டன. பின்னர் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்கள் ஆக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கோவை மண்டல தலைவர் வெங்கடாசலம், கௌரவ தலைவர் நடராசன், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் தர்மராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமதாஸ், நிர்வாகிகள் சுப்பிரமணியம், சின்னச்சாமி, உமா, குப்புசாமி, திருமலைசாமி, தங்கவேல், சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 33வது ஆண்டு விழாவில் தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்ற நிலையில் ஓய்வூதியர்கள் பலர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி